எல்.ஜி.எம் ஷூட்டிங் நிறைவு!

கிரிக்கெட் வீரர் தோனி, தனது மனைவி சாக்‌ஷியுடன் தொடங்கியுள்ள திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், தோனி என்டர்டெய்ன்மென்ட். இதன் மூலம் அவர் முதல் தயாரிப்பாக ‘எல்.ஜி.எம்' என்ற தமிழ்ப் படத்தைத் தயாரிக்கிறார். இதை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் டீசர் வெளியீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments