15 Years of Subramaniapuram | திரையரங்குகளில் ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்: சசிகுமார் அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 4-ம் தேதி ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இப்படத்தில் ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments