Breaking News

24 மணி நேரத்தில் 11+ கோடி பார்வைகள் - யூடியூபில் சாதனை படைத்த ‘ஜவான்’ பிரிவியூ

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ வெளியான 24 மணி நேரத்தில் 110 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘பிரிவ்யூ’ கடந்த ஜூலை 10 அன்று வெளியானது. இதில் முதல்முறையாக ஷாருக்கான் மொட்டைத் தலையுடன் தோன்றியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments