Breaking News

ஸ்வாதி பற்றி மீண்டும் வதந்தி

ஹைதராபாத்: சசிகுமார் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. இந்தப் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர், தெலுங்கு நடிகை ஸ்வாதி. தொடர்ந்து ‘கனிமொழி’, ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உட்பட சில படங்களில் நடித்தார். இவர் விகாஸ் வாசு என்ற விமானியைக் காதலித்து வந்தார். 2018-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் புகைப்படங்களை ஸ்வாதி நீக்கி விட்டதாகவும் இதனால் அவர் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வருடத்துக்கு முன்பும் இதே போல வதந்தி வெளியானது. அதை மறுத்திருந்தார் ஸ்வாதி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments