Breaking News

ஊதயதத உயரததய மரணள

ஹைதராபாத்: இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தார். துல்கர் சல்மான், ராஷ்மிகா நடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மிருணாள் தாக்குருக்கு மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப் சீரிஸ் வெளியானது.

இந்நிலையில் அவர் தெலுங்கில் 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். நானி ஜோடியாக ஒரு படத்திலும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். நானி படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய அவர், விஜய் தேவரகொண்டா படத்துக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments