Breaking News

வகரம படததகக கத எழதம லகஷ கனகரஜ?

சென்னை: ‘தங்கலான்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் புதிய படத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயல் பின்னணியில் இப்படம் உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments