Breaking News

Chandrayaan 3 | “நம் கொடி உயரே பறக்கட்டும்” - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

மும்பை: சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான்-3 ஒரு நிலவு நாள் முழுவதும் அங்கு இயங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு நிலவு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் விளக்கியிருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments