Breaking News

பாரம்பரிய கலை வடிவத்தை தொடர்வது மகிழ்ச்சி: ‘ஊருசனம்’ ஆல்பத்துக்கு கார்த்தி பாராட்டு

சென்னை: திரைப் பாடல்களுக்கு இணையாக தனி இசை ஆல்பமாக வெளியாகும் சுயாதீன பாடல்களும் வரவேற்பு பெற்று வருகின்றன. நமது நாட்டுப்புறக் கலைகளையும் நம் மண்ணின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக ‘ஊருசனம்’ தனி இசை வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது. இதை எழுதி, இசையமைத்து அட்ராம் என்பவர் தயாரித்தும் உள்ளார். முத்துச்சிற்பி மற்றும் ரேப்பர் ஃபனோஹா இந்தப் பாடலை பாடியுள்ளனர். முகின் ஜெயராஜ் இயக்கியுள்ளார். ட்ரெண்ட் மியூசிக்கில் வெளியாகி உள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலுக்கு நடிகர் கார்த்தி, பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நமது நாட்டுப்புறக் கலையையும் கலைஞர்களையும் இன்றைய இளம் கலைஞர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல தலைமுறைகளாகக் கடந்து வரும் நம் முன்னோர்களின் சொத்தான பாரம்பரிய கலை வடிவத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் கலைஞர்களைப் பார்த்து தலை வணங்குகிறேன் ” என்று கூறியுள்ளார் கார்த்தி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments