பழக்கமான ஒன்லைனுடன் பரபரக்கும் காட்சிகள் - சரத்குமாரின் ‘ஹிட்லிஸ்ட்’ டீசர் எப்படி?

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா மற்றும் சரத்குமார் நடித்துள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சூரியக்கதிர் மற்றும் கே.கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் ‘ஹிட்லிஸ்ட்’. சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். சி.சத்யா படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - க்ரைம் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. ‘சிங்கமோ திமிங்கலமோ வேட்டக்காரன பாத்துதான் மிருகங்கள் பயப்படணும்’ என்ற கம்பீரமான வாய்ஸ் ஓவரில் இன்ட்ரோ கொடுக்கிறார் சரத்குமார். சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்க்ஸ்லி என அடுத்தடுத்த நடிகர்களின் ரியாக்சனை வெளிப்படுத்த எங்கும் நிக்காமல் பரபரவென ஓடுகிறது டீசர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments