சினிமா லைட்டிங் ‘லைட்’டான விஷயமல்ல!

சினிமா கனவுகளின் கலை. இந்தக் கலையில் ஒளி மற்றும் நிழல்கள் மூலமாகவே கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. கதைகளைப் பிரம்மாண்டமான திரைக்காட்சிகளாக உருவாக்கவும் அல்லது எளிமையாகச் சொல்லவும் ஒளிப்பதிவாளருக்கு முறையான, தெளிவான திரை ஒளியமைப்பு (film lighting) நுணுக்கங்கள் அவசியம். ஒவ்வொரு திரைப்படத்திலும் பார்க்கும் காட்சிகளோடு பார்வையாளர்கள் ஒன்றிப் போக, லைட்டிங்கிற்கும் பெரும் பங்கு இருக்கிறது. கதாபாத்திரங்களின் வெவ்வேறு மன நிலையை வெளிப்படுத்த திரை ஒளியமைப்பு முக்கியமானது. அதனால் அதை ‘லைட்’டான விஷயமாகக் கடந்து விட முடியாது.
திரைத்துறையில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் தொழில் நுட்பம் சினிமாவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதைப் போல , இரண்டு மூன்று வருடங்களாக ஒளிப்பதிவு கருவிகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. இப்போது லைட்டிங் (lighting) விஷயங்களும் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. புதிதாக வந்திருக்கும் லைட்டுகள் பற்றிய விவாதம் உலக அளவில் நடைபெற்று வருகின்றன.
இதுபற்றி ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமாரிடம் கேட்டோம். இவர், ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, ‘பெரியார்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ஒளிப்பதிவு பற்றியும் சினிமா லைட்டிங் பற்றியும் புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments