ஜெயிலர் Review: ரஜினி - நெல்சன் கூட்டணியில் அதகளமும் ‘அமைதி’யும்!

’அண்ணாத்த’ - ‘பீஸ்ட்’ என்ற இரு தோல்விகளுக்குப் பிறகு ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ரஜினி - நெல்சன் இருவருக்குமே இருந்தது. ‘கபாலி’ திரைப்படத்துக்குப் பிறகு சிறப்பான ஓபனிங் என்று சொல்லப்படும் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜெயிலர்’, ரஜினி - நெல்சன் இருவருக்கும் கம்பேக் ஆக அமைந்ததா என்று பார்க்கலாம்.
சிட்டியில் சிலை கடத்தும் கும்பல் ஒன்று பல்வேறு கோயில் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது. இதனைத் தடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜுன் (வசந்த் ரவி). எதற்கும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருக்கும் சிலை கடத்தல் கும்பலின் தலைவனான (விநாயகன்) அர்ஜுனை கடத்திக் கொல்கிறார். இதனால் நிலைகுலைந்து போகும் அர்ஜுனின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான முத்துவேல் பாண்டியன் (ரஜினி), தன் மகனுக்காக பழிவாங்கப் புறப்படுகிறார். பல கொலைகள், தேடுதல், சண்டைகளைக் கடந்து விநாயகனை அடையும் ரஜினியை வேறு ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்கி, அவரிடம் தனக்கு தேவையான ஒரு வேலையை செய்ய சொல்கிறார் விநாயகன். அந்த வேலையை ரஜினி செய்து முடித்தாரா, இறுதியில் என்ன ஆனது என்பதே ‘ஜெயிலர்’ படத்தின் திரைக்கதை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments