“விஜய் 2 பாடல்களை பாடியுள்ளார்” - யுவன் கொடுத்த ‘தி கோட்’ பட அப்டேட்

சென்னை: “இதற்கு முன் இல்லாத வகையில் முதன்முறையாக ‘தி கோட்’ படத்தில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடியுள்ளார்” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் நடிக்கும் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் நிறைவடையும் எனத் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments