விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments