Breaking News

16 வருடத்துக்கு பின் மீண்டும் திருமணம் செய்த மலையாள நடிகர்

பிரபல மலையாள நடிகர் தர்மஜன். அமர் அக்பர் அந்தோணி, அச்சயன்ஸ், கோதா, டிரான்ஸ் உட்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் 16 வருடங்களுக்கு முன், அனுஜா என்பவரை காதலித்து, வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அந்த திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இதனால், மகள்கள் முன்னிலையில் இப்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணத்தை மகள்களின் எதிர்காலத்துக்காக பதிவு செய்துகொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments