Breaking News

Apple iPads: ஐ.... ஆப்பிளின் புது ஐபேடுகள்!

`அந்த நாளும் வந்திடாதோ' என டேப் பிரியர்கள் காத்துக்கொண்டிருந்த வைபவம் ஒரு வழியாய் மே மாதம் நடந்தேறிவிட்டது. ஆம், புதிய மாடல் டேப்லெட்களை ஆப்பிள் ஒருவழியாய் அறிமுகம் செய்துவிட்டது. `ஆப்பிள் டேப் வந்தால்தான் வாங்குவேன்' என தலையில் எண்ணெய் வைக்க அடம்பிடிக்கும் புது மாப்பிள்ளைபோல் காத்துக்கிடந்தவர்கள் எல்லாம், கிரெடிட் கார்டைத் தேய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளியான ஆப்பிள் டேப்-ல் என்ன ஸ்பெஷல்?

IPAD PRO

மிகவும் மெலிதான (5.1 mm), லைட்டான ஒரு டேப்லெட்டை வடிவமைத்திருக்கிறார்கள். pad proவே இவ்வளவு ஸ்லிம்மா இருக்கே, அப்ப Padair என்ன லெவல்ல இருக்கும் என யோசிக்கும் அளவுக்கு ஸ்லிம்மாக இருக்கிறது Pad Pro. 11", 13" என இரண்டு மாடல்களில் Pad Proவை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

OLED டெக்னாலஜி, Ultra Retina XDR டிஸ்ப்ளே என மிரட்டலாக வந்திருக்கிறது இந்த டிசைன். ஃபுல் ஸ்கிரீன் ப்ரைட்னெஸின் உச்சம் என இதைத் தாராளமாகச் சொல்லலாம்.

எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் விதமாக M4 சிப்செட்டை இந்த மாடலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது M2வை விட நான்கு மடங்கு வேகமாக வீடியோக்களை ரெண்டர் செய்யும் என்கிறது ஆப்பிள். இதன் CPU பெர்பாமன்ஸ் M2வை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்குமாம்.

IPAD PRO சில்வர், ஸ்பேஸ் பிளாக் என இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.99,999. இதன் 13" மாடலின் அதிக பட்ச விலை 3 லட்ச ரூபாயைத் தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

256GB முதல் 2 TB வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இந்த மாடல் கிடைக்கிறது.

நான்கு ஸ்பீக்கர் ஆடியோ மூலம் அட்டகாசமான சவுண்ட் சிஸ்டம் தரப்பட்டிருக்கிறது. நமது வாய்ஸ் ரெக்கார்டிங் வசதிகளுக்காக நான்கு ஸ்டூடியோ குவாலிட்டு மைக்குகள் தரப்பட்டிருக்கின்றன.

APPLE PENCIL PRO

டபுள் டேப் செய்வதன் மூலம், ஆப்பிள் பென்சில் ப்ரோவில் இருக்கும் டூல்களை உங்களால் ஸ்விட்ச் செய்ய முடியும். டேப்லெட்களில் இருக்கும் மேக்னெடிக் அட்டாச்மென்ட் மூலம் பென்சிலை அப்படியே சார்ஜும் செய்து கொள்ளலாம். பென்சில் ப்ரோவைக் காணவில்லை என்றாலும், Find My App மூலம் தேடிக்கொள்ளலாம்.

Magic Keyboard

அலுமினிய ஃபிரேம், சிறப்பான கவர், டைப் சி கனெக்டர், கிளாஸ் டிரேக்பேட் என மேஜிக் கீபோர்டு பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது. இதில் இருக்கும் கனெக்டர் மூலம் நேரடியாக டேப்லெட்டை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

IPAD Air

IPAD PROவைப் போலவே IPAD AIRஐயும் இரண்டுவிதமான அளவுகளில் வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். நமது அன்றாட டாஸ்க்குகளைக் கையாள M2 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கிறது.

Blue, Purple, Starlight, Space Grey என நான்கு நிறங்களில் இந்த டேப்லெட்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

Split View இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகளை ஒரே திரையில் நம்மால் எந்தவிதச் சிக்கலுமின்றி இயக்கமுடியும். 2732×2048 டிஸ்ப்ளே ரெசொல்யூசன், 600 nits ப்ரைட்னெஸ், Anti-reflective coating என டிஸ்ப்ளே ஏரியா பக்காவாக இருக்கிறது.

இதன் ஆரம்ப விலை ரூ.59,900.

ஆப்பிள் பென்சில் PRO, Magic Keyboard இரண்டையும் இதனுடன் பயன்படுத்த முடியும்.

128GB முதல் 1TB வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் இந்த மாடல் கிடைக்கிறது.

IPAD

34,900 ரூபாயிலிருந்து இந்த ஜெனரேசனின் IPAD விலை ஆரம்பமாகிறது.

நமது அன்றாட டாஸ்க்குகளைக் கையாள M2 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் A14 Bionic சிப்செட்டும் உண்டு.

Blue, Pink, Yellow, Silver என நான்கு நிறங்களில் இந்த டேப்லெட்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

IPADல் PENCIL PRO வசதி கிடையாது. மாறாக வழக்கமான பென்சிலைப் பயன்படுத்த முடியும்.

64GB முதல் 256GB வரை ஸ்டோரேஜ் ஆப்சன்களுடன் இந்த மாடல் கிடைக்கிறது.

மூன்றுவிதமான IPADகளிலும் 12MP Wide கேமராவும், 12MP Ultra Wide ஃப்ரன்ட் கேமராவும் பொதுவானது.



from விகடன்

No comments