Breaking News

ஹிட்லிஸ்ட்: திரை விமர்சனம்

ஐடி-யில் பணியாற்றும் விஜய்யின் (விஜய் கனிஷ்கா) அம்மாவும் (சித்தாரா) தங்கையும் (அபி நட்சத்திரா) முகமூடி அணிந்த 1 மர்ம நபரால் கடத்தப்படுகிறார்கள். காவல்துறை துணை ஆணையர் யாழ்வேந்தன் (சரத்குமார்) குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால் அவரது முயற்சிகளை முறியடிக்கும் அந்த முகமூடி மனிதன், விஜய் ஒரு கொலை செய்ய வேண்டும் என்றும் மறுத்தால் அம்மாவையும் தங்கையையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறான். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத வள்ளலார் பக்தனான விஜய், கொன்றானா? அந்த மர்ம மனிதன் யார்? அவன் நோக்கம் என்ன என்பது மீதிக் கதை.

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்திருக்கிறார். சூரியகதிர், கார்த்திகேயன் என இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். வழக்கமான அறிமுகக் காட்சிகளுக்குப் பிறகு படம் மையக் கதைக்குள் நுழைந்துவிடுகிறது. விஜய்யின் அம்மாவும் தங்கையும் கடத்தப்பட்டதில் இருந்து இடைவேளை வரை விறுவிறுப்பு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments