பிரபல ஹீரோ பெயரில் மோசடி: நடிகை திகங்கனா மீது புகார்

தமிழில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நாயகியாக நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மீது போலீஸில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஜீனத் அமன், திகங்கனா உட்பட பலர் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இதை மணீஷ் ஹரிசங்கர் என்பவர் இயக்கியுள்ளார். எம்.ஹெச். ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பின்போது நடிகை திகங்கனா தனக்கு சல்மான் கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார் ஆகியோரை தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும் என்று வெப் தொடரின் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் கூறி வந்துள்ளார். பின்னர் இந்த வெப் தொடரை வழங்குவதற்கு அக்‌ஷய் குமாரிடம் தான் பேசுவதாகவும் இதற்காக தனக்கு ரூ.75 லட்சமும் அக்‌ஷய் குமார் பெயரில் ரூ. 6 கோடியும் கேட்டார் என்று மணீஷ் ஹரிசங்கர் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments