Breaking News

“பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கவில்லை” - ரஜினிகாந்த்

சென்னை: “தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தனது ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திமுக தலைவர், என்னுடைய அருமை நண்பர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments