Breaking News

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள்

கொச்சி: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களுக்கு எதிரான பண மோசடி வழக்கை கையிலெடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை. கொச்சியில் உள்ள அலுவலகத்தில் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனியிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடியை வசூலித்தது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் மரடு காவல்நிலையத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments