‘இந்தியன் 2’ Review: ஷங்கர் - கமல் கூட்டணியின் ‘ஊழல் ஒழிப்பு’ திரைக்களம் எப்படி?

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் ‘இந்தியன்’. இதன்மூலம் தொழில்நுட்பம், திரைக்கதை, மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர். காலப்போக்கில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை பெற்று விட்ட இப்படம், சமூகத்தில் புரையோடிப் போன ஊழல் என்ற விஷத்தின் பாதிப்பு குறித்து மிக அழுத்தமாக பேசியது. அதன் இரண்டாம் பாகமாக, ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இந்தியன் 2’ முந்தைய பாகத்தின் கிளாசிக் அந்தஸ்த்தை தக்கவைத்ததா என்று பார்க்கலாம்.
தன் நண்பர்களுடன் ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து சமூக பிரச்சினைகளுக்காக, குறிப்பாக ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார் சித்ரா அரவிந்தன் (சித்தார்த்). தன்னால் எவ்வளவு முயன்றும் ஊழலை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான சேனாபதி என்கிற ‘இந்தியன்’ தாத்தாவை (கமல்ஹாசன்) வரவழைக்க #ComeBackINDIAN என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments