Breaking News

தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ஜூலை 26-ல் ‘புதுப்பேட்டை’ ரீரிலீஸ்! 

சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் வரும் 26-ம் தேதி தமிழ்நாட்டில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தனுஷின் ‘ராயன்’ படமும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் என அழைக்கப்படும் இப்படத்தில் சோனியா அகர்வால், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments