டோவினோ தாமஸ் படத்துக்கு இடைக்கால தடை

மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்துள்ளார். இவர் இப்போது நடித்துள்ள மலையாள படம், ‘அஜயன்டே ரண்டாம் மோஷணம்’. ஜிதின் லால் இயக்கியுள்ள இந்தப் படத்தை மேஜிக் பிரேம்ஸ், யுஜிஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதில் டோவினோ 3 வேடங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி, ஹரீஸ் உத்தமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பரில் வெளியாக இருந்தது.
இந்நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினீத் என்பவர், இந்தப் படத்தின் சில ஏரியா உரிமையை தனக்குத் தருவதாகக் கூறி, ரூ.3.20 கோடியை தயாரிப்பாளர்கள் கடனாகப் பெற்றனர்என்றும் ஆனால், உரிமையை வேறொருவருக்கு கொடுத்துவிட்டதாகவும் எர்ணாகுளம் முதன்மை துணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தத் தடை, படத்தின்ஓடிடி மற்றும் சாட்டிலைட் வெளியீடுகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments