வேலை இழந்த தொழிலாளர்களின் கடனை அடைக்க ஹாலிவுட் நடிகர் ரூ.8.7 கோடி நிதியுதவி

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன். இவர் ‘அன்டர்வேர்ல்ட்: ரைஸ் ஆஃப் த லைகன்ஸ்’, ‘தி ட்விலைட் சாகா: நியூ மூன்’, ‘மிட்நைட் பாரிஸ்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள போர்ட் டால்போட் நகரில், டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த ஆண்டுதனது எஃகு ஆலையை மூடியதால் 2,800 ஊழியர்கள் வேலை இழந்தனர். இதனால் இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. அவர்கள் குடும்பத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளனர். இதை அறிந்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன், பாதிக்கப்பட்ட 900 ஊழியர்களுக்கு ரூ.8.7 கோடி நிதி வழங்கி, அவர்களின் கடனை அடைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments