Breaking News

Gita-GPt: கடவுளிடமே பேசுவதாக நம்பும் மக்கள்; இது எப்படி ஆன்மிக அறிவுரைகளை வழங்குகிறது?

தொழில்நுட்ப வளர்ச்சியில் சாட் ஜிபிடியின் பங்கு அதிகமாக உள்ளது. கல்வி, அறிவியல் தாண்டி தற்போது ஆன்மிக தளத்துக்கும் புதுமைப் போக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஒரு உதாரணமாக இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படும் கீதா - ஜிபிடி (GitaGPT) அம்சத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இது பகவத் கீதையின் தத்துவ கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏஐ சாட்பாட் ஆகும். இது ஆன்மிக ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

கீதா - ஜிபிடியை கூகுளில் பணியாற்றும் இந்தியப் பொறியாளர் சுகுரு சாய் வினீத் என்பவர் உருவாக்கியிருக்கிறார்.இந்த ஏஐ சாட்பாட்டில் பகவத் கீதையின் 700 வசனங்கள் முழுமையாக டேட்டாவாக பயிற்சி அளிக்கப்பட்டு, ஆன்மிக கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுளிடமே பேசுவதாக மக்கள் நம்புகின்றனர்.

AI மூலமாக இயங்கும் இந்த சாட்பாட், பயனர் கேள்விகளை புரிந்து கொண்டு, பகவத் கீதையில் உள்ள வசனங்களை மேற்கோள் காட்டி, ஆன்மீக உணர்வு நிறைந்த பதில்களை தருகிறது.

Gita - GPt: Spiritual ChatGPt is popular among people

இந்தியாவில் GitaGPT பயன்பாடு?

இந்தியாவில் ஆன்மிக ஆலோசனைகளை வழங்கும் கீதா-ஜிபிடி பெரும் கவனம் பெற்று வருகிறது. நவீன வாழ்க்கை சிக்கல்களுக்கு இந்த AI, தத்துவம் நிறைந்த பதில்களை அளிக்கிறது.

வாழ்க்கைத் துன்பங்கள், தேவைகள் போன்ற பல கேள்விகளுக்கு இது உடனடி தீர்வுகளைப் பகிர்கிறது. உதாரணமாக, தேர்வு தோல்வி, மன அழுத்தம், வேலை குறித்து, யாராவது கேள்வி கேட்டால், இவற்றின் பதில்கள் பாரம்பரிய கீதையின் அறிவுரைகளை சார்ந்தே இருக்கிறது.



from விகடன்

No comments