Breaking News

AIdol: ரஷ்யாவின் முதல் AI ரோபோ; அறிமுக மேடையில் தலைகுப்புற விழுந்த வீடியோ வைரல் - என்ன காரணம்?

ரஷ்யா அறிமுகம் செய்த அதன் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட மனித உருவ ரோபோவான 'ஐடல்' (AIdol), மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் அறிமுகமான சில நொடிகளிலேயே மேடையில் விழுந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்கோவில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப நிகழ்ச்சியில் 'ஐடல்' ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. 'ராக்கி' திரைப்படத்தின் பின்னணி இசையுடன் கம்பீரமாக மேடையில் நடந்து வந்த இந்த ரோபோ, பார்வையாளர்களை நோக்கி கையசைத்தது. பின்னர் யாரும் எதிர்பாராத சமயத்தில் கீழே விழுந்தது.

AI - செயற்கை நுண்ணறிவு
AI - செயற்கை நுண்ணறிவு

இந்த ரோபோவை உருவாக்கிய 'ஐடல்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விளாடிமிர் கூறுகையில், "அளவுத்திருத்தச் சிக்கல்கள் (calibration issues) காரணமாகவே இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.

இது ஒரு கற்றல் அனுபவமாக எங்களுக்கு அமைந்துள்ளது.மேலும் பொறியாளர்கள் ரோபோவின் சமநிலை அமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருளை ஆய்வு செய்து வருவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.



from விகடன்

No comments