ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!
இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது.
இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு, வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது தான்.
பண பரிவர்த்தனை ஆப்களில் பணம் டெபிட் ஆகிவிட்டால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு’வோ (Undo) செய்ய முடியாது.
ஆனால், அடுத்து உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய ஸ்டெப்கள் இதோ...
1. எந்த நபருக்கு தவறுதலாக பணம் சென்றதோ, அந்த நபரிடம் பேசிப்பாருங்கள். அவர் உங்களைப் புரிந்துகொண்டு பணத்தை உடனடியாக அனுப்பிவிட்டால் பிரச்னை முடிந்தது... உங்களுக்கும் உங்கள் பணம் கிடைத்துவிடும்.
2. ஒருவேளை, அந்த நபர் மறுத்தால், அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே 'ரிப்போர்ட்' செய்யுங்கள்.
3. அடுத்ததாக, நடந்த விஷயத்தை விளக்கமாக எழுதி உங்களுக்கு வங்கியிடம் புகாரளியுங்கள். நேரில் செல்ல இயலவில்லை என்றால் புகாரை மெயில் செய்யுங்கள்.
4. அப்போது பிரச்னை சரியாகவில்லை என்றால் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளியுங்கள்.
NPCI லேட்டஸ்ட் சட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே, தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியும். ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறுதலாக பணம் அனுப்பினால், அதை 5 முறை மட்டுமே பெற முடியும். இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மக்களே.!
from விகடன்
No comments