Breaking News

Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?

> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

> இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத மாதிரி இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

> ஏற்கெனவே உற்பத்தியான ஸ்மார்ட் போன்கள் மற்றும் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப்பை சாப்ட்வேர் அப்டேட் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

- இவை ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய அரசின் சமீபத்திய உத்தரவு என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

Sanchar Saathi - Cybersecurity App
Sanchar Saathi - Cybersecurity App
இந்திய அரசு இப்படி வலியுறுத்தும் சஞ்சார் சாத்தி ஆப்பில் என்ன இருக்கிறது, என்னவெல்லாம் செய்யும் என்கிற பார்வை இதோ...

இந்த ஆப் முக்கியமாக 5 விஷயங்களை வைத்து செயல்படுகிறது.

முதலாவது, சந்தேக போன்கால்களை ரிப்போர்ட் செய்வது...

லாட்டரி ஆஃபர், லோன் ஆஃபர், வேலை ஆஃபர், KYC அப்டேட் என ஏதாவது சந்தேகப்படுவது மாதிரியான போன்கால் வந்தால், காவல் நிலையத்திற்கோ, சைபர் கிரைமுக்கோ செல்ல வேண்டாம்.

இந்த ஆப்பில் உள்ள 'Report Suspected Fraud Communication' ஆப்ஷனில் எளிதாகப் புகாரளிக்கலாம்.

இரண்டாவது, தொலைந்த மொபைல் போனை பிளாக் செய்வது...

மொபைல் போனில் முக்கிய தகவல்கள், போட்டோக்கள் உள்ளன. ஆனால், அது தொலைந்துவிட்டது. அந்தத் தகவல்களையோ, போட்டோகளையோ யாரும் ஆக்சஸ் செய்யாமல் இந்த ஆப்பிலேயே தடுத்துவிடலாம்.

இந்த ஆப்பில் இருக்கும் 'Block your Lost/Stolen Mobile Handset' ஆப்ஷன் மூலம், உங்கள் மொபைல் மற்றும் மொபைல் எண் குறித்த தகவல்களைக் கொடுத்து பிளாக் செய்துவிடலாம்.

மொபைல் போன் திரும்ப கிடைத்ததும், அன்பிளாக் செய்ய அலைய வேண்டாம். இதே ஆப்பிலேயே அதை எளிதாகச் செய்துவிடலாம்.

மொபைல் போன்
மொபைல் போன்
மூன்றாவது, உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் பதிவாகி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது...

இது இப்போது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. பிறரது பெயரையும், தகவல்களையும் வைத்து மோசடி பேர்வழிகள் மொபைல் எண் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் செய்யும் மோசடிகளுக்கு அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள்.

இதை தடுக்க இந்த ஆப்பிலேயே உங்களது பெயரில் எத்தனை மொபைல் எண்கள் இணைந்திருக்கின்றன என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

நான்காவது, உங்களது மொபைல் போன் எப்படி இருக்கிறது என்பதை சரிபார்ப்பது...

உபயோகிக்கும் மொபைல் போனிலோ, வாங்கும் மொபைல் போனிலோ எதாவது மோசடி ஆப்கள் உள்ளதா என்பதை IMEI நம்பரை வைத்தே கண்டுபிடிக்கலாம்.

ஐந்தாவது, இன்டர்நேஷனல் மொபைல் நம்பர் மோசடியைத் தடுப்பது...

இன்டர்நேஷனல் மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருவதுபோல இப்போது நிறைய மோசடிகள் நடக்கின்றன. அந்த நம்பர்களை இந்த ஆப் மூலம் ரிப்போர்ட் செய்துவிடலாம்.

சைபர் மோசடி
சைபர் மோசடி

இந்த ஆப்பில் என்ன நன்மை?

ஆன்லைன் மோசடி முதல் மொபைல் போன் திருட்டு வரை காவல் நிலையத்திற்கோ, சைபர் பாதுகாப்பு பிரிவிற்கோ சென்று அலையாமல், முதல் கட்ட நடவடிக்கையை இந்த ஆப்பிலேயே ஈசியா எடுக்க முடியும்.

அதுவும் பாதிக்கப்பட்ட நபரே எளிதாக செய்ய முடிகிறபோது, இது அவருக்குப் பெரிய நிம்மதியைத் தரும்... ஓரளவு மன உளைச்சலும் குறையும்.

இன்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கொடுத்துள்ள தகவலின் படி,

இந்த ஆப் மூலம் இதுவரை...

> 1.75 மோசடி மொபைல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

> கிட்டத்தட்ட 20 லட்சம் தொலைந்த மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

> 7.5 லட்சம் திருடப்பட்ட மொபைல்கள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன.

அப்புறம் என்ன பிரச்னை?

இந்த ஆப் தேவைதான். ஆனால், இதைக் கட்டாயமாகத் திணிப்பது தவறு... இது தனிநபரின் உரிமை மீறல் என்பது எதிர்க்கட்சியின் குரலாக இருக்கிறது.

ஆனால், இந்த ஆப்பை வேண்டாமென்றால் டெலீட் செய்துகொள்ளலாம் என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.



from விகடன்

No comments