Breaking News

‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் வில்லனாகும் கவுதம் மேனன்

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் வில்லனாக இணைந்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் படம் 'ஹிட்லிஸ்ட்'. இந்தப் படத்தில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை 'தெனாலி', 'கூகுள் குட்டப்பா' படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் காமெடி, ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments