Breaking News

ஓடிடியில் வெளியானது சமந்தாவின் ‘சாகுந்தலம்’

ஹைதராபாத்: சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் நேற்று நள்ளிரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அதிதி பாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் 3டி தொழில்நுட்பம் இல்லாமல் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பிறகு 3டி தொழில்நுட்பத்தில் படத்தை மாற்றுவதற்காக அந்த ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பல்வேறு ரிலீஸ் தேதி மாற்றுதலுக்குப்பின் ஒருவழியாக திரையரங்குகளில் வெளியான இப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments