Breaking News

`மதிப்பெண் ரகசியம் இதுதானா' - ChatGPT உதவியோடு அசைன்மென்ட் முடித்த மாணவி; வாயடைத்த பேராசிரியர்கள்!

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் தன்னுடைய முதலாம் ஆண்டு அசைன்மென்ட்டுகளை சாட்ஜிபிடி உதவியோடு எழுதி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

மாயா பாட்னிக் ஹார்வர்டில் படிக்கும் மாணவி. இவர் சாட்ஜிபிடி-4ன் உதவியுடன், தன்னுடைய அசைன்மென்ட்டுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றதை குறித்துக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Chat GPT

இந்தச் சம்பவம் குறித்து மாயா கூறுகையில், ``இரண்டு வாரங்களுக்கு முன்பு 8 ஹார்வர்டு பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களிடம், வகுப்பில் சொல்லப்பட்ட அசைன்மென்ட்டிற்கு சாட்ஜிபிடி-4ன் உதவியுடன் எழுதிய கட்டுரைகளைச் சமர்ப்பித்து அவர்களின் பதில்களைக் கேட்டேன். அவர்கள் இது செயற்கை நுண்ணறிவு அல்லது என்னால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று குழம்பினர். ஆனால் அனைத்துமே சாட்ஜிபிடி-யால் எழுதப்பட்டது.

சில ஆசிரியர்கள், `கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது', `தெளிவான விளக்கத்தோடு உள்ளது' என்று குறிப்பிட்டு மிகவும் பாராட்டினர்’’ என்று தெரிவித்துள்ளார்.

சாட்ஜிபிடி வேலையைப் பறிக்கும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தாலும், அதன் திறன் குறித்த ஆச்சர்யமூட்டும் பல சம்பவங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் மாணவி, அதன் உதவியோடு கட்டுரை எழுதியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.



from விகடன்

No comments