விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் ஓடிடியில் வெளியான ‘ஆதிபுருஷ்’

மும்பை: ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கிய திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்திருந்தனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments