பாஸ்கர் சக்தியின் ‘ரயில்’ திரைப்படம் ஜூன் 21-ல் ரிலீஸ்!

சென்னை: பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘ரயில்’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் தலைப்பு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வடக்கன்’. இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments