Google-க்கு செக் வைக்கும் ZOHO-வின் `Ulaa browser' - என்ன ஸ்பெஷல்?
இந்தியாவில் வாட்ஸப்பிற்கு மாற்றாக 'ZOHO' நிறுவனம் 'அரட்டை' ஆப்பை வெளியிட்டு செக் வைத்திருக்கிறது. இதையடுத்து கூகுள் குரோம் பிரவுசருக்கு செக் வைத்திருக்கிறது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வெப் பிரவுசர்களான 'Google, Chrome, Safari' க்கு சவால் விடும்படியாக இந்திய நிறுவனமான ZOHO நிறுவனத்தின், 'Ulaa'என்ற பிரவுசரை வெளியிட்டு இருக்கிறது.
இது ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டு தளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. ' 'Ulaa (உலா)' என்றால் சுற்றுலா, உலவுதல், பயணம் போன்றவற்றை குறிக்கக்கூடிய தமிழ் சொல்லையே இந்த பிரவுசருக்கு பெயராக வைத்துள்ளனர். உலாவின் லோகோ கிட்டத்தட்ட குரோமை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
2023-லேயே மினிமம் டிசைனில் கொண்டுவரப்பட்டது இந்த பிரவுசர். ஆனால் சரியான பார்ட்னர்ஷிப் இல்லை, மார்க்கெட்டிங் இல்லை எனப் போன்ற பல காரணங்களினாலும் அப்பொழுது இந்த பிரவுசர் மக்களை அதிகமாக சென்றடையவில்லை.
இப்பொழுது ZOHO-வின் அரட்டை ஆப், ZOHO Mail-ஐ மத்திய அமைச்சர்கள், அமித் ஷா உள்ளிட்டோர் 'Made in India நம் நாட்டு பொருட்களை பயன்படுத்தலாம், தொழில்நுட்பத்தில் தன்னிறைவைப் பெற வேண்டும்' என ஆதரவளித்து பிரபலப்படுத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ZOHOவின் இந்த 'Ulaa' பிரவுசரும் ட்ரெண்டாகி வருகிறது.
டேட்டா ட்ரான்ஸாக்ஷன், டேட்டா பிரைவசி போன்றவற்றை வைத்து ஒரு உலகப் போரே கூட வரலாம் என்று கூறி வருகின்றனர்.
அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது நமது தரவுகளை பாதுகாக்கக்கூடிய 'data privacy'. ஆனால், இந்த பிரைவசி இப்பொழுது எந்த பிரவுசரிலும் கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
உதாரணமாக நாம் ஒரு ப்ராடக்டைப் பிரவுஸ் பார்க்கிறோம் என்று தெரிந்தால் அதே பிராடக்டையோ அல்லது நாம் பிரவுசரில் தேடியது சம்பந்தமான விளம்பரங்களாக வந்துகொண்டே இருக்கின்றன.
இப்படி நம் தரவுகளுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால் ஒரு கேள்வி குறிதான்.
ஆனால் 'Ulaa (உலா)' பிரவுசரில் டேட்டா பிரைவசி 100% இருக்கின்றது என்று 'ZOHO' நிறுவனம் கூறுகிறது. அதாவது நீங்கள் பிரவுஸ் செய்வதையோ உங்களது தரவுகளையோ மூன்றாவது நபராக (Third Parties) யாருமே பார்க்க முடியாது என்று உறுதியளிக்கிறது.
உலா பிரவுசரை 'A first privacy browser' என்றும் மார்க்கெட் செய்கிறார்கள்.
'Google, Chrome' போன்றவற்றில் நாம் தேடும் விஷயங்களை இதிலும் தேடலாம். இதுபோக என்ன ஸ்பெஷலான வசதிகள் இதில் இருக்கின்றன என்று கேட்டால், நான்கு விதமான பயன்முறைகளை இதில் கொடுக்கின்றனர்.
-
பர்சனல் மோட் (Personal Mode),
-
டெவலப்மென்ட் மோட் (Development Mode),
-
கிட்ஸ் மோட் (Kids mode),
-
ஓபன் சீசன் மோட் (Open Season Mode)
பர்சனல் மோடில் உங்களுக்கு பர்சனல் ஆக எது வேண்டுமானாலும் நீங்கள் பிரவுஸ் செய்து கொள்ளலாம். டெவெலப்மென்டல் மோடில் நீங்கள் எந்தவிதமான வேலை பார்க்கிறீர்களோ அது தொடர்பாக அல்லது திறன் மேம்பாட்டு சம்பந்தமாகவும் பார்த்துக் கொள்ளலாம் . கிட்ஸ் மோடு என்பது பெற்றோரின் கட்டுப்பாட்டோடு (Parental control) இயங்கக்கூடிய மோடாகும். உங்களின் குழந்தையின் வயதுக்கு மீறிய கன்டன்டுகளை எல்லாம் தவிர்த்து ஃபில்டர் செய்து கொடுக்கிறது. ஓபன் சீசன் மோடு என்றால் எந்தவித தடைகளும் இல்லாமல்(No restrictions) எதை வேண்டுமானாலும் பிரவுஸ் செய்து கொள்ளலாம்.
டிஜிட்டல் இறையாண்மையை மேம்படுத்தி இந்திய அரசு நடத்திய போட்டியில் டிஜிட்டல் தரவுகளை பாதுகாப்பதில் 'உலா' வெற்றி பெற்றிருக்கிறது. இருந்தாலும் இந்த 'உலா' பிரவுசர் கண்ட்ரோலர் ஆஃப் செர்டிபையிங் அத்தாரிட்டிஸ் (Controller Of Certifying Authorities -CCA ) கீழ்தான் இயங்க வேண்டியது இருக்கின்றது.
அதாவது பயனர்களின் தரவை மாற்றி அமைக்க உலாவில் உள்ள இணைய நெறிமுறைகளை CCA வால் கையாள முடியும் என்கின்ற பட்சத்தில் டேட்டா பிரைவசி என்பது எங்கே இருக்கின்றது என்று பலரும் கேட்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் 'google,chrome' போன்ற வெப் பிரவுசரில் ஏதேனும் சிக்கல் வரும் என்றால் தகுந்த எச்சரிக்கைகளை கொடுக்கும்.
ஆனால் 'உலா' பிரவுசரில் இது போன்ற எச்சரிக்கைகள் என்பது எந்த அளவிற்குத் துல்லியமாக நம்மை வந்து சேரும் என்பது ஒரு சந்தேகம்தான்.
'உலா' பிரவுசர் இந்திய நாட்டைச் சார்ந்தது என்பதால் அதை பயன்படுத்துவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்று இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பலர் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் 'உலா பிரவுசரை யூஸ் பண்ணுவது பாதுகாப்பானது தானா?' என்பதையே கூகுளில் தான் தட்டிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் 'google, chrome' என்று ஜெயண்ட் ஃபீச்சர்ஸைக் கொண்ட வெப்சைட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்திப் பழகி இருக்கிறோம் என்பதால் திடீரென்று உலாவிற்கு மாறுவதற்கும், உலா பிரவுசர் மக்களை சென்று அடைவதற்கும் கொஞ்சம் கஷ்டம் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
அப்படியே ZOHO கூறுவது போல் உலாவில் பிரைவசி இருந்தாலும் வெறும் பிரைவசி, ப்ராடக்ட்டிவிட்டி என்கின்ற இரண்டு ஃபீச்சர்ஸை மட்டுமே மையமாக வைத்து அதிகப்படியான ஆடியன்ஸைக் கவர் பண்ண முடியுமா என்பது சந்தேகம்தான்.
நம் சென்னை ஆப், 'Made in India' என்பதற்காக பலரும் இதை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். டெக் ஆப்களில் தமிழ் பெயர்களைப் பார்ப்பதும் அவ்வளவு அழகாக இருக்கிறது.
சென்னை பையனான அரவிந்த் சீனிவாசனின் 'Comet', கூகுளின் 'Gemini', என 'AI' பிரவுஸிங் ஆப்கள் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் இந்த ட்ரெண்டில், ZOHOவின் இந்த 'உலா' பிரவுசர்' ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்
No comments